‘காற்றில் விட்ட கதையாக தான் உள்ளது: மீனவர் கோரிக்கை’

கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆடுதுறை ஷாஜகான் கூறும்போது, ‘தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமங்களின் ஒட்டு மொத்த அழுத்தம் காரணமாக தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. பணிகளை விரைவில் முடித்து துறைமுகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

தமிழகத்தில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக பூம்புகார் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது அது பொலிவிழந்து சீர்கெட்டு கிடக்கிறது. மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. மீனவ மக்கள் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை காற்றில் விட்ட கதையாக தான் உள்ளது’ என்றார்.

Related Stories:

>