ரெண்டாவது முறையும் ஆத்தோட போயிருச்சு எம்எல்ஏ வாக்குறுதி: பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 3 சட்டமன்ற தொகுதி உள்ளன. 1977 முதல் உள்ள பூம்புகார் தொகுதி இதற்கு முன் செம்பனார்கோவில், பொறையார் என்றும் அழைக்கப்பட்டு வந்த தொகுதியாகும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பூம்புகார் தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜ் உள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஆடுதுறை ஷாஜகான் போட்டியிட்டார். இந்த தொகுதி பொறுத்தவரை, கடந்த 2 தேர்தலிலும் அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜ் தான் வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளார்.

ஆனால் அவர் பெயரளவுக்கு தான் எம்எல்ஏவாக இருந்து உள்ளார். செயலில் எதுவுமே காட்டவில்லை. ெதாகுதி மக்களுக்காக களத்தில் இறங்கி எதுவுமே செய்யவில்லை. மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் அரசு அனுமதியுடன் கட்டுமான பணி துவங்கியுள்ளது. ஆனாலும் சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களை கடல் அரிப்பில் இருந்து காப்பாற்ற கருங்கல்பாறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 10 ஆண்டுகளாக நிறைவேறாமல் அப்படியே கிடக்கிறது. சின்னங்குடி மீனவ கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதையே இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் மயான பாதை அமைத்து தந்திட வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை கிடப்பில் கிடப்பதும் அவர்களை வேதனைபடுத்துகிறது.

தொகுதிக்கு பூம்புகார் என்று பெயர் இருந்தாலும், பூம்புகாரும் அங்கு அமைந்துள்ள சிலப்பதிகார கலைகூடமும் பொலிவிழந்து கிடப்பது தொகுதிக்கு ஒரு அவமானமாகத்தான் மீனவர்கள் நினைக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவில் வேலை தேடி சென்ற இந்தியர்களின் உரிமை பாதிக்கப்பட்டபோது அவர்களது உரிமைகளுக்காக போராட்டம் நடந்தது. அப்போது 16 வயதிலேயே போராட்டத்தில் கலந்து கொண்ட வீரமங்கை வள்ளியம்மமை சிறை சென்று உடல் நலிவுற்று வெளியே வந்து உயிர் தியாகம் செய்தார். அவரது மணிமண்டபமும் பொலிவிழந்துதான் கிடக்கிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க ஊர் பொலிவிழந்து கிடக்கிறதே என தொகுதி மக்களிடையே வேதனை இருந்து வருகிறது.

‘தொடர்ந்து 2வது தடவையாக இரட்ைட இலைக்கு ஓட்டு போட்டு பவுன்ராஜை ஜெயிக்க வைத்தோம். 2வது தடவையாக தேர்தலில் நிற்கும் போதும் கூட வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் வாக்குறுதி எல்லாமே ஆத்தோட போயிருச்சு. தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் அடித்து விடலாம் என அதிமுகவினர் கனவில் இருந்து வருகின்றனர். அதெல்லாம் மறந்து விடவேண்டியதுதான்’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

Related Stories: