மிஸ்டர் வாக்காளர்... 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகள்

* எஸ்.ரமேஷ், தாம்பரம் தாம்பரம் நகராட்சியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாம்பரம் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கழிவுநீர் குழாய்கள் பதிப்பது, கழிவுநீர் அகற்று நிலையம், ஆள் நுழைவு வழி அமைப்பது, சுத்திகரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது உட்பட பல கட்டங்களாக பிரித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் ₹160.97 கோடியில் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் இத் திட்டம் துவங்கப்பட்டதால் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால், தற்போது திறந்த வெளியில் கழிவு நீர் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், தாம்பரம் நகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால்மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்திருந்தால் மக்கள் இவ்வளவு பிரச்சனைகளை அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே மீண்டும் அடுத்த ஆட்சி திமுக ஆட்சி ஆக அமைந்தால் மட்டுமே இந்தப் பணிகள் முடிவடையும் என்ற நிலை உள்ளது.

Related Stories: