திருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா? போலீசார் விசாரணை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ராம்கி (30). இவரது மனைவி காயத்ரி(25). இவர்களுக்கு சாய்சரண் (4) என்ற மகனும், மூன்றரை மாத ஆண் கைக்குழந்தையும் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் சாய்சரண் குறித்து ஜோதிடர் ஒருவரிடம் ராம்கி ஜாதகம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுவனுக்கு சனி திசை நடப்பதாகவும், இதனால் தந்தை-மகன் இருவருக்கும் ஆகாத காலம். மூத்த மகன் உங்களுடன் இருக்கும் வரை முன்னேற்றம் ஏற்படாது. தந்தை, மகன் பிரிந்து வாழ வேண்டும் என ஜோதிடர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராம்கி, காயத்ரியிடம் தெரிவித்தபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம் 26ம்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்கி, சாய் சரண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். காயத்ரியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சிறுவன் தீக்காயத்துடன் கிடந்தது  தெரியவந்தது.  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்றுமுன்தினம் இறந்தான். இதுகுறித்து, காயத்ரி நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஜோதிடர் சொன்ன தகவலை வைத்துக்கொண்டு மூத்த மகனிடம் ராம்கி பாசமாக பேச மாட்டார்.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின்போது மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். ெதாட்டிலில் தூங்கி கொண்டிருந்த கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வௌியே ஓடிவந்து கதறினேன். அப்போது அருகில் இருந்தவர்கள் மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் நன்னிலம் போலீசார் ராம்கியை கைது செய்து மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>