கொடைக்கானலில் காட்டுத்தீ

கொடைக்கானல்: தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தற்போதே ஆரம்பித்தது போல் வெயில் கொளுத்தி வருகிறது. கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே தேன் பண்ணை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் காட்டுத்தீ பரவியது. இப்பகுதியில் மரங்கள் அதிகளவில் இல்லாததால் செடிகள், புல்வெளிகள் மற்றும் சில மரங்கள் எரிந்தன.

காட்டுத்தீ காரணமாக காட்டுப்பன்றி, கேழையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைக்கு வர துவங்கின. கொடைக்கானல் வனத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில் தீ வைத்ததாலே காட்டுத்தீ பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: