திமுக குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு; நகராட்சி அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையாளர் உத்தரவு

ஆறுமுகநேரி: திமுக குறித்து அவதூறாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காயல்பட்டினம் நகராட்சி அலுவலரை நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அறிவுடைநம்பி (48). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூடலூர் நகராட்சியில் இருந்து பணி மாறுதலாகி காயல்பட்டினம் நகராட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக திமுக பற்றி அவதூறாகவும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் ஜாதி, மத ரீதியாகவும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து காயல்பட்டினம் நகர திமுக பொறுப்பாளர் முத்துமுகமது தலைமையில் திமுகவினர் நேற்று காலை நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் சுகந்தி, உடனடியாக விசாரணை நடத்தி நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>