புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த மார்ச் 23ம் தேதி முழு  ஊரடங்குக்கு பின் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு  ஜன.4ம் தேதிக்குபின் அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அரை நாள் மட்டுமே பள்ளிகள்  இயங்கி வந்தது. இந்தநிலையில், கல்வித்துறை அறிவிப்பிற்கிணங்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று முதல் முழுநேரமாக செயல்படத் தொடங்கின.

அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள், இடவசதி குறைபாடு காரணமாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் 2 பேட்ஜ்களாக பிரித்து ஒருநாள்விட்டு ஒருநாள் பள்ளிக்கு வர அறிவுறுத்தி உள்ளன.

Related Stories: