தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் நடைமுறை, அமலாக்கத்துக்கு வரும்போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும் தொடர் கதையாகவே இருக்கிறது. வணிக சுதந்திரம் என்பது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. தேர்தல் அதிகாரிகள் அவர்களின் ஆளுமைக்குள், ஏற்கனவே எடுக்கிற சட்ட நடைமுறைகளுக்கு முரணாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறபோது, அது வணிகர்களை, பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கிறது.

உதாரணமாக, ஆண்டுக்கு ₹40 லட்சம் வரை பொதுமக்கள் தங்களின் பழைய நகைகளை விற்று சுய தேவை, கல்வி செலவு, திருமணச் செலவு போன்ற அவசர செலவினங்களுக்குக்கூட பழைய நகைகளை  விற்று, தேவையான பொருட்களை வாங்குவதற்கான நிலை மறுக்கப்படுகிறது. பேரமைப்பு அளித்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, வணிகர்களும், பொதுமக்களும் இயல்பான நிலையை கைகொள்கின்ற வழிமுறைகளை அமல்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திடுமாறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகிறது.

Related Stories: