மனைவியை உரல் கல்லால் அடித்து கொன்ற பேராசிரியருக்கு தூக்கு தண்டனை

சென்னை: சென்னை, அண்ணாநகர் செந்தூர் அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் பேராசிரியர் கண்ணன் (41). இவர் மனைவி மோகனாம்பாள் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இவரது மனைவி சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். கண்ணன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் மனைவி தினமும், கணவனை அவரது குடும்பம் ஏழ்மையானவர் என்றெல்லாம் கூறி, ஆபாசமாக திட்டிவந்துள்ளார். எனவே, குடும்பத்தில் தினமும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ‘என்னை வேறு யாரேனும் பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள்’ என்றெல்லாம் கூறி வந்துள்ளார்.

இதனால் கடந்த 16.12.2012 அன்று கணவன், மனைவி இருவருக்கும் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கண்ணன் மனைவியை அடித்துள்ளார். அதற்கு அவர் திருப்பி கணவனை அடித்துள்ளார். இதனால், சண்டை முற்றி மனைவியை உரல் கல்லால் அடித்துள்ளார். அதில் மயங்கி கீழே விழுந்த அவரை, கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 4வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் முரளிகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, கண்னன் அவரது மனைவியை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

Related Stories: