கல்வி, விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு எம்எல்ஏ ஆலோசனை

மாலூர்: வாழ்க்கையில் முன்னேற்றமடைய கல்வி எப்படி அவசியமோ, அதேபோல் உடல் நலத்திற்கு விளையாட்டு மிகவும் அவசியம் என்று மாலூர் தொகுதி எம்எல்ஏ நஞ்ேசகவுடா தெரிவித்தார். மாலூர் டவுன் முனிசிபாலிட்டி சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையில் தாலுகா அளவிலான விளையாட்டு ேபாட்டி தொடங்கியது. அதை துவக்கி வைத்து அவர் பேசும்போது, சிறுவயதில் நாம் என்னென்ன நல்ல பழக்கங்களை கற்று கொள்கிறோமோ அவை அனைத்தும் முதுமையில் நமக்கு பலமாக அமையும். சிறு வயதில் நல்ல அறிவாற்றலுடன் கல்வியை பயின்றால், படிப்படியாக உயர் படிப்பு படிக்கும்போது, அவை ஒத்துழைக்கும். எதையும் சுலபமாக படிக்க உதவும்.

கல்வி எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமடைய அவசியமாக இருக்கிறதோ, அதேபோல் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் விளையாட்டு மிகவும் அவசியம். மாணவ, மாணவிகள் விளையாட்டில் அதிகம் நாட்டம் ெசலுத்த வேண்டும். மாலூர் தாலுகாவில் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் நிதியுதவியை எதிர்பார்ப்பதை காட்டிலும் வசதிப்படைத்தவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: