நியாயம் கிடைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்வது அவசியம்: மத்திய அரசு நோட்டரி பேச்சு

கோலார்: கோலார் நகரில் ஏற்பாடு செய்திருந்த ‘‘சட்ட பரிமாற்றமும், பொதுமக்கள் நலனும்’’ என்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து மத்திய அரசு நோட்டரி தங்கராஜ் பேசும்போது, நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் மன்னர் ஆட்சி இருந்தபோது ஒவ்வொரு ராஜ்ஜியத்திற்கும் தனி தனி சட்டம் இருந்தது. அவர்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் பெற்றபின், தேசிய அளவில் பொருந்தும் வகையில் ஒரே சீரான சட்டம் கொண்டுவரப்பட்டது. நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி யார் மீதாவது குற்றம்சாட்டினால், அதை நிரூபிப்பதற்கு சாட்சிகள் மற்றும் ஆதாரம் இருக்க வேண்டும். அநியாயம் நடந்திருந்தாலும், போதிய சாட்சிகள் இல்லாமல் நியாயம் கிடைக்காது.

ஒவ்வொரு வழக்கிலும் வாதி, பிரதிவாதிகளின் சார்பில் ஆஜராகும் வக்கீல்களின் வாதத்தை அடிப்படையாக வைத்தே நீதிபதிகள் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

அந்த சமயத்தில் அநியாயத்திற்கு உள்ளானவர்களுக்கு முழுமையாக நியாயம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் உண்மை செத்து, பொய் வென்று விடுகிறது. இந்நிலை மாற வேண்டுமானால், சட்டத்தில் மாற்றம் செய்வது அவசியமாகும்.  அதற்கு ஏற்றவகையில் நமது சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>