தேர்தல் எதிரொலி மே 2க்குப்பிறகு லாரி ஸ்டிரைக் என அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபைக்கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. பின்னர், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 26ம் தேதி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்நிலையில் தமிழகம் உட்பட 5 மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories:

>