சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காவல் நிலையங்களில் 2,100 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மாநகர காவல் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகர காவல் எல்லையில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என 2,700 பேர் காவல் துறை உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். தேர்தல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துப்பாக்கி உரிமம் வைத்துள்ள 2,700 பேர் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் சென்னை முழுவதும் 600 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

அப்படி ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை போலீசார் மாநகர காவல்துறை ஆயுத கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 2,100 துப்பாக்கிகளை விரைவில் அதன் உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: