பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: திருச்சி சிவா எம்பி காட்டம்

சென்னை: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மலில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது. இ்க்கூட்டத்தில் திருச்சி சிவா பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்கும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. அதற்கு மாநில அரசான அதிமுக அரசும் துணை போகிறது.

Related Stories:

>