ஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் செயல்படும் எனிகஸ் என்ற தனியார் ரேடியா, தொலைக்காட்சி நிலையத்தில் பணி புரிந்த 3 பெண் ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக பசீர் என்பவரை கைது செய்த போலீசார், அவர் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறினர். ஆனால், அவர் தலிபான் அல்ல என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் முஜாகித் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், 3 பெண் ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும், அரசு சார்பான தொலைக்காட்சியில் பணி புரிந்ததால், சுட்டுக் கொன்றதாக ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>