பாஜவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க முடிவு? இன்று ஓப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

சென்னை: பாஜவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. பாஜவுக்கு 21 சீட் தருவதாக அமித்ஷாவிடம் எடப்பாடி சொன்னார். ஆனால் கடைசியாக 30 சீட் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்பிக்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்ட தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், கிஷன்ரெட்டி, வி.கே.சிங், கேசவவிநாயகம் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, 40 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுக தலைவர்களிடம் தமிழக பாஜ தலைவர்கள் வழங்கினர். அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 சீட், வடமாவட்டங்களில் 5, கொங்கு மண்டலத்தில் 5, தென் தமிழகத்தில் 15, மத்திய மாவட்டங்களில் 10 சீட் கேட்டிருந்தனர்.

தென் தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிக சீட் கேட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முக்கிய தொகுதியான சேலம், கோவை, திருப்பூர் தொகுதிகளும் அடங்கும். இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜவினர் பெரும்பாலும் அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது வெற்றிபெற்றுள்ள தொகுதிகளை கேட்டு வருகின்றனர். இதனால் அதில் ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்த தலைவர்கள் பெரும்பாலான தொகுதிகளை தங்களுக்கே வழங்கும்படி கேட்டனர்.

பேச்சுவார்த்தை இறுதியில் சசிகலாவை கழற்றிவிட பாஜவுக்கு தெரிவித்ததால், 30 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் தமிழக பார்வையாளர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அமித்ஷாவை சந்தித்தனர். அதன்பின்னர், சென்னை திரும்பும் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரடன் 30 சீட்டுகளுக்கு இன்று ஒப்பந்தம் செய்கின்றனர் என்று அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: