3ம் கட்ட பரிசோதனை முடிவு கோவாக்சின் தடுப்பூசி 81% திறன் கொண்டது: பாதுகாப்பானது என அறிவிப்பு

புதுடெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசி 81 சதவீதம் திறன் கொண்டது என 3ம் கட்ட பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தன. இதற்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், 2 கட்ட பரிசோதனை முடிவுகளை மட்டுமே வெளியிட்ட நிலையில் கோவாக்சினுக்கு அவசர அவசரமாக அனுமதி தந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல், சுகாதார பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயங்கினர்.

இந்த தயக்கத்தை போக்க கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி, கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அது நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. 25 மையங்களில் மொத்தம் 25,800 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதன்மூலம்,  இந்த தடுப்பூசி மொத்தம் 80.6% செயல்திறன் கொண்டதாக 3ம் கட்ட பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது,’ என கூறப்

பட்டுள்ளது.

* இங்கி. வைரசையும் எதிர்க்கும்

கோவாக்சின் தடுப்பூசி, இங்கிலாந்தில் உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரசையும் எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது என 3ம் கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

Related Stories:

>