வேண்டாதவர்களை சிக்க வைக்க யாரோ சுட்டு விட்டதாக நாடகமாடிய எம்பி. மகன்: உபி.யில் அம்பலம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜ எம்பி. மகன் துப்பாக்கிச்சூடு நாடகமாடியது அம்பலமானதால், அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான எம்பி.யின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். உ.பியின் மோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதி பாஜ எம்பி.யாக இருப்பவர் கவுஷால் கிஷோர். இவரது மகன் ஆயுஷ். இவர் நேற்று அதிகாலை அவரது மைத்துனர் ஆதர்ஷ் உடன் மைதியோன் பகுதிக்கு சென்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர், அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில், தனக்கு வேண்டாதவர்கள் மீது வீண் பழி போடுவதற்காக, எம்பி மகன் ஆயுஷ் தன்னை துப்பாக்கியால் சுட சொன்னதாக, ஆதர்ஷ் போலீசில் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான எம்பி மகன் ஆயுஷை தேடி வருகின்றனர். யாரை சிக்க வைப்பதற்காக ஆயுஷ் நாடகம்ஆடினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>