வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை: வாகன விபத்தில் உயிரிழந்த 2 ஆயுதப்படை காவலர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 28 லட்சத்திற்கான காசோலையை போலீஸ் கமிஷனர் வழங்கினார். சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த கார்த்திக்(34) மற்றும் ரவீந்திரன் ஆகியோர் கடந்த 19.2.2021 அன்று அதிகாலை ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து முனைய பாதுகாப்பு பணிக்கு பைக்கில் சென்றனர். அப்போது அம்பத்தூர் எஸ்டேட் சந்திப்பில் கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், 2 காவலர் குடும்பத்திற்கு உதவும் வகையில் சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் சுய விரும்பத்தின்படி மொத்தம் ரூ. 28 லட்சம் பணம் பெறப்பட்டது. இதையடுத்து உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பங்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தலா ரூ. 14 லட்சம் வீதம் ரூ.28 லட்சத்திற்கான காசோலைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

Related Stories:

>