கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி: சென்னை ஆவடி, ஸ்ரீதேவி நகர், கலங்கல் தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம்(50). ஆவடி, காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் சரவணன் (எ) கட்லா சரவணன் (33), சத்யா(24). இவர்கள், அடிக்கடி மது, மற்றும் கஞ்சா போதையில் ரவுடிகளாக வலம் வந்தனர். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஆவடி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் காசிலிங்கம் (50). இவரது வீட்டின் அருகில், மேற்கண்ட 2 பேரும், போதையில் அடிக்கடி கலாட்டா செய்து வந்தனர். இதனை பலமுறை காசிலிங்கம் தட்டுக்கேட்டுள்ளார். ஆனால், அவர்களின் செயல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, கடந்த 5.1.2014 அன்று கட்லா சரவணன், சத்யா ஆகியோர், காசிலிங்கம் வீட்டின் அருகே போதையில் தகராறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட அவரை, இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இதுதொடர்பாக, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்மல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகள்குக முன் அவர்கள், ஜாமீனில் வெளியே வந்தனர். அதில் சத்யா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் கொலை செய்யப்பட்டார்.‘இந்நிலையில், இநத் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் நேற்று தீர்ப்பளித்தார். அதில் சரவணன் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 7ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அந்தமான் முருகன் வாதாடினார்.    

Related Stories: