ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்கா - தம்பி சாவு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஏரியில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி அக்கா, தம்பி பலியானார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. ஆர்.கே.பேட்டை அடுத்த சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி (11) என்ற மகளும், புருஷோத் (10) என்ற மகளும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கிராமத்தின் அருகில் உள்ள  ஏரியில், 2 பேரும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஏரியின் ஆழத்துக்கு சென்ற புருஷோத், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்த கோமதி, தம்பியை காப்பாற்ற முயன்றபோது, அவளும் நீரில் முழ்கினாள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் சடலமாக மீட்டனர். தகவலறிந்து ஆர்கே பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>