அனைத்து கட்சியினருடன் போலீசார் ஆலோசனை

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற உள்ள தேர்தலையொட்டி திருப்போரூர், காயார், மானாம்பதி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐக்கள் ஜோதி, ஆறுமுகம், ஆளவந்தார், மணி உள்பட பலர் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது, தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது. மேலும், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை அமைதியாக நடத்த உதவுமாறு போலீசார் கேட்டு கொண்டனர். கூட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>