சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மதுபான கடைகள் செயல்பாடுகள், மதுபானங்கள் விற்பனை மற்றும் உரிமமின்றி எடுத்து செல்லுதல், கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதலை கடைபிடித்தல் மற்றும் விதிமீறல் நடவடிக்கைகள் போன்றவற்றை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் உத்தரவின்படி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டல அளவிலான பறக்கும் படை துணை ஆட்சியர் செல்வகுமார் தலைமையில் மேற்பார்வையாளர்கள் ராஜா, கிருஷ்ணகுமார், துரைராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உதவி மேலாளர் (கணக்கு) பிரசாத் தலைமையில் பணியாளர்கள் நீலகண்டன், சிவா, கமலநாதன், தமிழ்முருகன், செல்வகுமாரும், வடக்கு மாவட்டத்திற்கு உதவி மேலாளர் பாரதிதாசன் தலைமையில் பணியாளர்கள் கண்ணன், தனஞ்செயன், செந்தில்குமார், ஏமநாத்குமார், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு கலால் மேற்பார்வை அலுவலர் வசந்தி, வடக்கு மாவட்டத்திற்கு உதவி மேலாளர் பாரதிதாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>