3வது பாதையில் ரயில் சோதனை ஓட்டம்

செங்கல்பட்டு: தென் மாவட்டங்களுக்கான எதிர்கால ரயில் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரூ.256 கோடி செலவில், 30 கிமீ தூரத்துக்கு 3வது அகல ரயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2016 பிப். 7ம் தேதி தாம்பரத்தில் நடந்த விழாவில், அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, 3வது ரயில் பாதை பணியை துவக்கி வைத்தார். இந்நிலையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்படும் 3வது அகல ரயில்பாதை பணிகளில், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே பணிகள் முடிவடைந்தது.

இதையொட்டி, கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள்கோவில் இடையே, பாதை பணி முடிந்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், தலைமையில் சமீபத்தில் விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தி வெற்றிகரமாக முடித்தனர். இந்நிலையில், சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே, 3வது பாதை பணி முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, இப்பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.குமார்ராவ் தலைமையில் விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தினார். இந்த சோதனை ஓட்டத்தில் ரயிவேத்துறை அதிகாரிகள் மகேஷ், ரவீந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>