ஐடிஐ கல்லூரியில் திருட்டு

சாம்ராஜ்நகர்: குண்டல்பேட்டை தாலுகா பேகூர் கிராமத்தில் உள்ள ஐடிஐ கல்லூரியின் பூட்டை உடைத்து மாணவர்களுக்கான டெமோ மாருதி கார், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவை உடைத்து அதன் ஹாட்டிஸ்கை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் பேகம் கொடுத்த புகாரின் பேரில் பேகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>