வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கியவர் கைது

கொள்ளேகால்: சட்டவிரோதமாக வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 வெடிகள், 47 வெடி பொருட்களுக்கான டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளேகால் தாலுகா மேகலாதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (64). இவர் சட்டவிரோதமாக தன் வீட்டில் வெடிபொருட்களை பதுக்கி வைத்து வனப்பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவல் கிடைத்ததும் கொள்ளேகால் வனத்துறை அதிகாரிகள் ேசாதனை நடத்தி ஜோசப்பை கைது செய்து அவரிடமிருந்து 25 வெடிகள், 47 வெடிபொருட்களுக்கான டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>