புளியரை சோதனை சாவடியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற ஏப்.6ம்ேததி தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் புளியரை சோதனைச்சாவடியில் தென்காசி கலெக்டர் சமீரன், ஆய்வு மேற்கொண்டார். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் சேர்ந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.  அந்த காரில் பின்பக்கம் 350 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோணி பகுதியை சேர்ந்த ராஜன் (57) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜனை கைது செய்த புளியரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: