×

சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க மாவட்டம் மற்றும் மண்டல அளவில் பறக்கும் படை அமைப்பு: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை.!!!

சென்னை: சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க மாவட்டம் மற்றும் மண்டல அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கையில், சென்னையில் மதுபானங்கள் கடத்துவது தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு நடவடிக்கை  எடுக்கும் வகையில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல்  அலுவலர்/ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்..

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 வருகின்ற 06-04-2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை  தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ளிடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னை  மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள், தினசரி விற்பனையை கண்காணித்தல்,  மொத்தமாக கொண்டு செல்வதை தடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கடைகள் செயல்படுவதை கண்காணித்தல், கொரோனா  வைரஸ் தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட  அளவிலான பறக்கும் படை குழு, மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்ட அளவிலான பறக்கும் படை


* செல்வகுமார்         துணை ஆட்சியர்     94450 29756
* ராஜா                மேற்பார்வையாளர்   78715 72630
* கிருஷ்ணகுமார்      மேற்பார்வையாளர்    98413 43340
* துரைராஜ்            மேற்பார்வையாளர்    98413 10002

சென்னை மண்டல அளவிலான பறக்கும் படை குழு:

* சென்னை வடக்கு; ராஜகோபால்  வட்டாட்சியர்/ டிப்போ மேலாளர்   98400 41501
* சென்னை மத்தியம்: யுவராஜ்     உதவி மேலாளர்(கணக்கு)                  99623 20423
* சென்னை தெற்கு:   ராஜகவேல்   உதவி மேலாளர்(கணக்கு)                91760 26054

எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல்  கட்டுப்பாட்டு அறைக்கு 1800-425-7012 என்ற எண்ணிலும், மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்ணிற்கும் தெரிவிக்கலாம் என  ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai , District and regional level flying squadron to monitor liquor shops in Chennai: Corporation Commissioner's action. !!!
× RELATED சென்னையில் பெயர் பலகை அழிப்பு போராட்டம்