மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று படிப்பை தேர்வு செய்யவில்லை என தமிழக அரசு கடிதம்: மாணவி அதிர்ச்சி

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று படிப்பை தேர்வு செய்யவில்லை எனற தமிழக அரசின் கடிதத்தை எதிர்த்து மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்த்ராவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியை சேர்ந்த மாணவி சந்திரலேகா நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நேர்காணலுக்கான அழைப்போ, தமிழக அரசின் 7.5 சதவிகிதத்திற்கான கலந்தாய்விற்கான அழைப்போ வரவில்லை.

இதனால் அவர் அண்ணா பல்கலை கழகத்தில் பி.இ. சிவில் இன்ஜினியரிங் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார். ஆனால் சந்திரலேகா மருத்துவகலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலக்கியதாகவும் அவரது முகவரிக்கு தமிழக அரசு பெயரில் கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மற்றும் அவரது தாய் மகேஷ்வரி தனது மகளை மருத்துவ படிப்பில் சேர்க்குமாறு அரசுக்கு உத்த்ராவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன் மருத்துவகலந்தாய்வில் மாணவி கலந்து கொண்டதால் தான் அந்த உத்ராவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொள்ளவில்லை என்பது தவறான தகவல் எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு குறித்து தமிழக அரசும் தேர்வு குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவி சந்திரலேகா கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்த்ராவிட்டு மார்ச் 12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்த்ராவிட்டார்.

Related Stories: