சட்டப்பேரவை தேர்தல்: பொதுமக்கள் வாக்களிப்பதற்காக ராமநாதபுரத்தில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு

கோவை: தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்) ராமநாதபுரத்திற்க்கு வந்து உள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் தேர்தல் அச்சத்தை போக்கவும், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பை நடத்தி வருகினறனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு மண்டபம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இந்த அணிவகுப்பில் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Related Stories:

>