இந்திய கம்யூ. மாநில நிர்வாக குழு கூட்டம்; 6-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறம் என அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூ. மாநில நிர்வாக குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 6-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில நிர்வாக குழு கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறும் தான் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என கூறினார். பெண்ணைப் பார்த்த அன்றே திருமணம் செய்ய முடியாது, அதுபோல் தான் கூட்டணி பேச்சுவார்த்தையும் என கூறினார்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது எனவும் குழு பேசி வருகிறது எனவும் கூறினார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் ஒரிரூ நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும் என கூறினார். மேலும் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என கூறினார்.

Related Stories:

>