நீதிமன்றத்தை இழிவாக பேசிய எச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?: ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய எச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?, வருகின்ற ஏப்ரல் 27ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 2018ம் ஆண்டு திருமயத்தில் பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா நீதிமன்றத்தை இழிவாக பேசியதை அடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடர்ந்தனர்.

Related Stories:

>