நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என கமல் அழைப்பு; நான் கட்சியில் இணைந்துள்ளேன்: பொன்ராஜ்

சென்னை: வல்லரசு இந்தியா என்ற கலாமின் கனவை நனவாக்க மத்திய, மாநில அரசுகள் தவறவிட்டது என முன்னாள் அப்துல் காலமின் உதவியாளர் பொன்ராஜ் கூறினார். ம.நீ.ம, ச.ம.க., ஐ.ஜே.கே. கட்சிகள் கூட்டணி உறுதி என சரத்குமார் கூறியிருந்தார். நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என கமல் மீண்டும் அழைப்பு விடத்திருந்தார். ஆககே நான் கட்சியில் இணைந்துள்ளேன் என கூறினார். இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவராக பொன்ராஜை கமல் நியமனம் செய்துள்ளார். அப்துல் கலாமின் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்து விட்டது என பொன்ராஜ் குற்றம் சாட்டினார்.

கமல் விடுத்த அழைப்பை ஏற்று, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார். ரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கான கொள்கைகளை உருவாக்கினேன். தற்போது அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ரஜினி கட்சி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நான் கமலுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன் என கூறினார். சமூக நீதி, அரசியல் நீதி, நீடித்த பொருளாதார நீதி அனைத்தும் மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் என கூறினார்.

Related Stories:

>