நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்: சி.டி.ரவி பேட்டி

சென்னை: சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்தார். அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை என கூறினார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம் என கூறினார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார். சசிகலா, தினகரனின் அரசியல் பலம் மற்றும் பலவீனம் பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும் என பேட்டியளித்தார். 2 பேரையும் சேர்ப்பது பற்றி பாஜக எந்த ஒரு அழுத்தமும் தரவில்லை என கூறினார். சட்டப்பேரவை தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories:

>