கேரள பயணிகள் வருகை குறைந்ததால் சூட்டிங்மட்டம் வெறிச்சோடியது

ஊட்டி: கேரள சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்ததால் சூட்டிங்மட்டம் பகுதி வெறிச்சோடியது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளது. கேரளா எல்லையில்  அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்குள் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மாநில எல்லைகளில் உள்ள 6 ேசாதனை சாவடிகளிலும்  நிறுத்தப்பட்டு அதில் பயணிக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாநில எல்லைக்குள்  அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிேசாதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,  கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதன் காரணமாக, ஊட்டி - கூடலூர்  சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி  வெறிச்சோடி காணப்படுகின்றன. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே பார்வையிட்டு செல்கின்றனர்.

Related Stories: