திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி சென்ற டிப்பர் தீயில் சேதம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரில் வைக்கோல் கட்டுகள் ஏற்றி சென்ற போது தாழ்வான  மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்து டிராக்டர் டிப்பர் சேதமானது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி கவரக்குளம் பகுதியில் விவசாயி முத்துவேல் என்பவருக்கு  சொந்தமான டிராக்டர் டிப்பரில் வைக்கோல் கட்டுகள் ஏற்றிச்சென்றார்.  அப்போது அதே பகுதியில் தாழ்வான மின் கம்பியில்  வைக்கோல் கட்டுகள் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டிப்பரில் இருந்த  வைக்கோள் கட்டுகளை அப்புறப்படுத்தி மேலும் தீபரவாமல் தடுத்தனர். இதில் வைக்கோல் கட்டுகள் முழுவதும் எரிந்து  சாம்பலானது. டிப்பரின் ஒரு பகுதி சேதமானது. தீவிபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>