பள்ளப்பட்டி ரங்கராஜ் நகரில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

அரவக்குறிச்சி: தினகரன் செய்தி எதிரொலியாக அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி ரங்கராஜ் நகரில் காவிரி  கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் சாலையோரம் ஓடி வீணாகியது. இது உடனடியாக சீரமைக்கப்பட்டது.மரவாபாளயம் காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக்குடிநீர் அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டி பேருராட்சி மற்றும்  அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளுக்கு பூமிக்கடியில் பெரிய பைப் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப்  படுகின்றது. இந்நிலையில் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி ரங்கராஜ் நகரில் சாலையோரம் காவிரி குடிநீர் குழாய்  உடைந்தது.

இதிலிருந்து கடந்த 10 நாட்களாக ஏராளமாக குடிநீர் வெளியேறி ரங்கராஜ் நகர் தெரு மற்றும் அரவக்குறிச்சி சாலையில்  சாலையோரம் ஓடி வீணாகியது, கடந்த 10 நாட்களாக இதுவரையிலும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி  பொதுக்கள் கவலையுடன் கூறினர். இதனால் மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து குடிதண்ணீர் வீணாகாமல் தடுக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில்  படத்துடன் பிரசுரமானது.இதையடுத்து , சம்பந்தப்பட்ட துறையினர் அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி  தோண்டி, உடைந்த பெரிய குடிநீர் குழாயை பணியாளர்கள் சரி செய்தனர்.கடந்த பத்து நாட்களாக ஏராளமாக வெளியேறி வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனை உடனடியாக சரிசெய்வதற்கு  படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: