நாங்கள் கறிவேப்பிலையா? கொத்தமல்லியா?...ராதிகா ஆவேசம்: சரத்குமார் உத்தரவிட்டால் கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிட தயார்

தூத்துக்குடி: வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பிர் நடிகையும், கட்சியின் பொதுச்செயலாருமான ராதிகா சரத்குமார் போட்டிடுவார் என கட்சியின் துணை பொதுச் செயலாளர் விவேகபானந்தன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்தக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவேகானந்தன் பேசினார். வேளச்சேரி தொகுதியில் தற்போது திமுகவைச் சேர்ந்த வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. எனவே இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மைச் துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார். பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் நல்லவர்களும், ஒருமித்த கருத்துடையவர்களும், ஒருமித்த எண்ணங்கள் உடையவர்களும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கமல்ஹாசனை நேரடியாக சந்தித்தேன் என பேட்டியளித்தார்.

சமக பொதுக்குழுவில் ராதிகா சரத்குமார் பேச்சு:

கடுமையாக உழைப்பின் மூலம் இந்த உயர்ந்த இடத்தை சரத்குமார் அடைந்துள்ளார் என ராதிகா பொதுக்குழுவில் பேசினார். கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். மதவாத சக்தியோடு அதிமுக இணைந்துள்ளது என விமர்சனம் செய்தார். சரத்குமார் உத்தரவிட்டால் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் போட்டியிடுவேன் என கூறினார். நாங்கள் கறிவேப்பிலையா? கொத்தமல்லியா? என அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமக ராதிகா கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் சரத்குமார் இருந்துள்ளார் என கூறினார். ஜெ. இல்லாத இடத்தில் மற்றவர் பேச்சை கேட்டுக் கொண்டு இருக்க விருப்பமில்லை என பேசினார்.

Related Stories: