சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு அளிக்க இன்று கடைசி நாள்: நாளை நேர்க்காணல்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் குவிந்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி முதல் அதிமுகவில் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் தங்களுடைய விருப்ப மனுக்களை அளிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அதிமுக கட்சியினர் பலர் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை 5,700 க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் விருப்பமனு அளிப்பதற்கான நேரம் முடிவடைகிறது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் தற்போது விருப்ப மனுக்களை அளிப்பதற்காக அதிமுக அலுவலகத்தில் குவிந்திருக்கிறார்கள். சுமார் 1,500 லிருந்து 2,000க்கும் மேற்பட்டவர்கள் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

பிப்ரவரி 24ஆம் தேதி அன்றே எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களுடைய விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். நாளை அனைத்து மாவட்டங்களுக்கான நேர்க்காணலை அதிமுக தலைமை நடத்துகிறது.

Related Stories: