தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். வரும் 8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். வரும் 9-ம் தேதி திண்டுக்கல், மதுரையில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். மார்ச் 11ஆம் தேதி தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாக கூறினார். மார்ச் 7ந் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருச்சியில் வரும் மார்ச் 7-ம் தேதி 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்ட அறிக்கை வெளியிட உள்ளதாக ஸ்டாலின் கூறியிரந்தார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமையுடன் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் நிறைவுபெற்றது. தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வருகிற 5-ம் தேதிக்குள் முடித்து இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மார்ச் 7-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: