ஒடிசாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.7.9 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 3 பேர் கைது...முக்கிய குற்றவாளிக்கு வலை..!!

கோராபுட்: ஒடிசாவில் கட்டுக்கட்டாக 7 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா - ஆந்திர மாநில எல்லையான கோராபுட் என்ற இடத்தில் ஒடிசா காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது சத்தீஸ்கர் மாநில பதிவு எண்-ஐ கொண்ட காரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 7 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் காரில் கடத்தப்படுவதை கண்டறிந்தனர்.

இதையடுத்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ள ஒடிசா காவல்துறையினர் காரில் இருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் கள்ளநோட்டுகள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தயாரிக்கப்பட்டதும், விசாகபட்டினத்திற்கு அதனை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர காவல்துறையின் உதவியுடன் ஒடிசா போலீசார், இதில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போராபுட் எஸ்.பி. வருண் தெரிவித்ததாவது, சத்தீஸ்கர் மாநில பதிவு எண் கொண்ட காரினை தடுத்து சோதனையிட்ட போது 4 பைகளில் கட்டுக்கட்டான பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்துள்ளது. மூன்று பேரை கைது செய்து விசாரித்ததில், கள்ளநோட்டுகள் சத்தீஸ்கரில் இருந்து விசாகபட்டணம் கொண்டு செல்லப்பட இருந்தது தெரிந்தது என்று குறிப்பிட்டார்.

Related Stories:

>