டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!

டெல்லி: டெல்லியில் காலியாக உள்ள மாநகராட்சியின் 5 வார்டுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில் 4 வார்டுகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ரோகினி, ஹாலிமர்பாக், திரிலோக்புரி, கல்யாணபுரி, சௌகான் பங்கர் என்ற 5 இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தற்போது முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

இதில் 5 வார்டுகளில் 4ஐ ஆம் ஆத்மி கைப்பற்றியது; ஒரு வார்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட 5 வார்டுகளில் ஒன்றில் கூட பாரதிய ஜனதா வெற்றிபெறவில்லை. வாக்கு வித்யாசம் என்பதும் அனைத்து தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. தொடர்ந்து வெற்றியை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்து வந்த பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தோல்வி என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரசை பொறுத்தவரையில் பல மாநிலங்களில் அவர்கள் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில் டெல்லியில் அவர்கள் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்ற இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கை தாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: