×

நேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று சற்ற அதிகரித்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.608 குறைந்து சவரன் 34,128-க்கு விற்பனையானது. மேலும் மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.448 குறைந்து சவரன் ரூ.34,288-க்கு விற்பனையானது. இந்நிலையில் தொடந்து தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் உள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : Gold prices rose by Rs 56 to Rs 34,344 per ounce
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...