தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2.93 லட்சம் பறிமுதல்...தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!

கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2.93 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முன்னூறு என்ற இடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணத்தை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த பூழமந்தலில், காரில் ஜெயராமன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 90 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் பாஜக-வினர் கட்சியின் சின்னம் பொறித்த நாட்காட்டிகளை பக்தர்களிடம் விநியோகித்தனர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அங்கு சென்ற போலீசார் சுமார் 1000 நாட்காட்டிகளை பறிமுதல் செய்ததுடன் பாஜக நிர்வாகி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: