ரவி சாஸ்திரிக்கு கொரோனா தடுப்பூசி

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஒலிம்பிக் போட்டியில்  பங்கேற்கும்  வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். தடுப்பூசி போடும் பணி தொடங்கி 2 மாதங்கள் ஆன நிலையிலும், விளையாட்டு வீரர்களுக்கு போடப்படவில்லை.  தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் அதற்கு காரணமாக இருந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, மற்றவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நேற்று முதல் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கிடைத்தது. விஞ்ஞானிகளுக்கும்  மருத்துவ வல்லுநர்களுக்கும் நன்றி’ என்று ட்வீட் செய்துள்ளார். நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் விளையாட்டு பிரபலம் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

Related Stories: