ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என்று வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கக்கோரி வழக்கு: உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கு சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெறவில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் பணியல்ல, இதுசம்பந்தமாக மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: