இனிமேல் தனித்தனியாக கிடையாது நாடாளுமன்றத்துக்கு ஒரே சேனல் சன்சாத்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப, சன்சாத்’ என்ற ஒரே சேனல் தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவும், மாநிலங்களவை நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தனித்தனி சேனல்கள் உள்ளன. இவை 2ம் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு. ‘சன்சாத்’ என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலங்களவை தலைவரும், மக்களவை சபாநாயகரும் இணைந்து எடுத்த முடிவின்படி, ராஜ்யசபா மற்றும் லோக் சபா தொலைக்காட்சியை ஒருங்கிணைத்து ‘சன்சாத்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் ஒப்பந்த அடிப்படையில் ஓரு ஆண்டுக்கு நியமனம் செய்யப்படுகிறார்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>