பயணிக்கு உடல்நிலை பாதிப்பு: இந்திய விமானம் பாக்.கில் அவசரமாக தரையிறக்கம்

கராச்சி: ஷார்ஜாவில் இருந்து லக்னோ வந்த விமானத்தில் பயணிக்கு  திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், பாகிஸ்தானில் விமானம்  அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா நகரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் லக்னோ விமான நிலையம் நோக்கி இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஹபிப் உர் ரஹ்மான் (67) என்ற பயணிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.

இதனால், விமானத்தை பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்கு பாகிஸ்தானின் விமான போக்குவரத்து ஆணையத்திடம் விமானி அனுமதி கேட்டார். அதற்கு உடனடியாக அனுமதியும் கிடைத்தது. இதனால், விமானம் அங்கு தரையிறங்கியது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக விரைந்து ஹபிப் உர் ரஹ்மானை சோதனை செய்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து, அந்த  விமானம் மீண்டும் லக்னோ புறப்பட்டது.

Related Stories:

>