பாஜ எம்பி நந்த்குமார் கொரோனாவுக்கு பலி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், கன்த்வா மக்களவை தொகுதி பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் (69). இவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நந்த்குமார் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இவர், 1978ம் ஆண்டு ஷாபூர் மாநகராட்சி கவுன்சிலில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்.

பின்னர், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1985ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை எம்எல்ஏ.வாக இருந்தவர். முதல் முதலாக 1996ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வானார். பின்னர் 1998, 1999, 2004, 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மீண்டும் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, பாஜ முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>