‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்

வாஷிங்டன்: இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை கடந்த 2014ல் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ராணுவ ஒப்பந்தத்திலும், சில பணிகள் உள்நாட்டில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இறக்குமதியை குறைத்து உள்நாட்டு பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, 2021ம் ஆண்டுக்கான வர்த்தக கொள்கை மற்றும் 2020ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இந்தியாவின் பெரிய சந்தை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கிய முன்னேற்றம் ஆகியவை பல அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு இன்றியமையாத சந்தையாக அமைந்துள்ளது. ஆனாலும், வர்த்தக கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் பொதுவான மற்றும் நிலையான போக்கு இருதரப்பு வர்த்தக உறவின் திறனைத் தடுத்துள்ளது. இதன் மூலம், இறக்குமதியை குறைத்துக் கொள்ள முக்கியத்துவம் அளித்து வரும் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ பிரசாரம், இருதரப்பு வர்த்தக உறவில் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>